லாபம் குறைந்தபோதிலும், பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் கொடுத்த ஓ.என்.ஜி.சி…

 

லாபம் குறைந்தபோதிலும், பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் கொடுத்த ஓ.என்.ஜி.சி…

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.1,378 கோடி ஈட்டியுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான ஆயில் அண்டு நேச்சுரல் கியாஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.) நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.1,378 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் மிகவும் குறைவாகும். கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் விலை குறைந்ததே இதற்கு முக்கிய காரணம்.

லாபம் குறைந்தபோதிலும், பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் கொடுத்த ஓ.என்.ஜி.சி…
ஓ.என்.ஜி.சி.

2020 டிசம்பர் காலாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் வருவாய் ரூ.17,024 கோடியாக குறைந்துள்ளது. இது, 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 28 சதவீதம் குறைவாகும். கடந்த டிசம்பர் காலாண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.3 சதவீதமும், கியாஸ் உற்பத்தி 6 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளது.

லாபம் குறைந்தபோதிலும், பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் கொடுத்த ஓ.என்.ஜி.சி…
டிவிடெண்டு

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.1.75ஐ வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியன் கேஸ் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை வாங்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் முதலாவது மற்றும் செயல்பாட்டில் உள்ள ஒரே ஒரு கியாஸ் எக்ஸ்சேஞ்ச் இந்தியன் கேஸ் எக்ஸ்சேஞ்ச் என்பது குறிப்பிடத்தக்கது.