ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி (2020) ப்ரீ-புக்கிங் அமேசான் தளத்தில் தொடக்கம்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவியின் ப்ரீ-புக்கிங் அமேசான் தளத்தில் தொடங்கியுள்ளது.

டெல்லி: ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவியின் ப்ரீ-புக்கிங் அமேசான் தளத்தில் தொடங்கியுள்ளது.

ஒன்பிளஸ் வருகிற ஜூலை 2 ஆம் தேதி இந்தியாவில் தனது ஸ்மார்ட் டிவி சீரீஸை வரிசையை அறிமுகம் செய்ய உள்ளது. மிட் ரேஞ்ச் மற்றும் என்ட்ரி-லெவல் மார்கெட்டை குறி வைத்து இந்த டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்தாண்டு ஒன்பிளஸ் டிவி க்யூ 1 மற்றும் ஒன்பிளஸ் டிவி க்யூ 1 ப்ரோ டிவி மாடல்கள் ரூ.69,900 தொடக்க விலையில் அறிமுகம் ஆகின. அது போல இல்லாமல் குறைந்த விலையில் இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

OnePlus

வு மற்றும் சியோமி உள்ளிட்ட பிராண்டுகளை போல மிட் ரேஞ்ச் மற்றும் என்ட்ரி-லெவல் டிவி சாதனங்களை வெளியிட்டு அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க ஒன்பிளஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  ரியல்மி நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் பட்ஜெட் டிவி பிரிவில் நுழைந்தது. அந்த வகையில் வெவ்வேறு திரை அளவுகளில் புதிய ஸ்மார்ட் டிவிக்களை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது. அவற்றின் தொடக்க விலை சுமார் ரூ.15,000 விலையாக நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவிக்களின் ப்ரீ-புக்கிங் அமேசான் தளத்தில் தொடங்கியுள்ளது. இப்போது இந்த டிவியை புக் செய்தால் ரூ.3000 மதிப்புள்ள இரண்டு வருட வாரண்டியை ரூ.1000 விலையில் வாங்க முடியும். இந்த தொகையும் ஆகஸ்ட் 10-க்கும் அமேசான் பே கணக்கில் வரவு வைக்கப்படும்.

Most Popular

அமெரிக்காவிலும் களைகட்டிய ராமர் கோயில் பூமிபூஜை கொண்டாட்டங்கள்!

அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜை விழாவை அமெரிக்காவிலும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர் அங்குள்ள இந்தியர்கள். அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 200 மத தலைவர்களுக்கு...

அண்ணாவின் கொள்ளுப்பேத்தி குடிமைப் பணி தேர்வில் வெற்றி – உதயநிதி வாழ்த்து

2019 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதில் தேர்ச்சியானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பால் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது....

புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் குடும்பத்துடன் தலைமறைவு!

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 286 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் அதிகபட்சமாக ஒரே நாளில் 7பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 182 நபர்கள் புதுச்சேரியிலும், 21 பேர்...

மாப்பிள்ளை பிளஸ் டூ… மகள் இன்ஜினீயரிங்… காதல் திருமணத்தால் ஆத்திரம்!- அந்தஸ்தால் இளைஞரை கொன்று சாலையில் வீசிய பெண்ணின் தந்தை, தாய் மாமன்

பிளஸ் டூ படித்த காய் கறி வியாபாரியை இன்ஜினீயரிங் படித்து வரும் மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை, மாப்பிள்ளையை கொலை செய்துவிட்டு சாலையில் வீசி சென்ற...