ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை 2 முதல் புதிய ஸ்மார்ட் டிவி சீரீஸ் அறிமுகம்

 

ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை 2 முதல் புதிய ஸ்மார்ட் டிவி சீரீஸ் அறிமுகம்

டெல்லி: ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை 2 முதல் புதிய ஸ்மார்ட் டிவி சீரீஸ் அறிமுகம் செய்ய உள்ளது.

ஒன்பிளஸ் வருகிற ஜூலை 2 ஆம் தேதி இந்தியாவில் தனது ஸ்மார்ட் டிவி சீரீஸை வரிசையை அறிமுகம் செய்ய உள்ளது. மிட் ரேஞ்ச் மற்றும் என்ட்ரி-லெவல் மார்கெட்டை குறி வைத்து இந்த டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்தாண்டு ஒன்பிளஸ் டிவி க்யூ 1 மற்றும் ஒன்பிளஸ் டிவி க்யூ 1 ப்ரோ டிவி மாடல்கள் ரூ.69,900 தொடக்க விலையில் அறிமுகம் ஆகின. அது போல இல்லாமல் குறைந்த விலையில் இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வு மற்றும் சியோமி உள்ளிட்ட பிராண்டுகளை போல மிட் ரேஞ்ச் மற்றும் என்ட்ரி-லெவல் டிவி சாதனங்களை வெளியிட்டு அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க ஒன்பிளஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  ரியல்மி நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் பட்ஜெட் டிவி பிரிவில் நுழைந்தது. அந்த வகையில் வெவ்வேறு திரை அளவுகளில் புதிய ஸ்மார்ட் டிவிக்களை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது. அவற்றின் தொடக்க விலை சுமார் ரூ.15,000 விலையாக நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.