மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று

 

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று

இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும், அவருடைய குடும்பத்தினர் 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களுக்கு முன்பாகவே கொரோனா அறிகுறி தெரிந்ததாகவும் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதால் தற்போது அறிகுறி குறைந்துள்ளதாகவும் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவால் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.