ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு: டாஸ்மாக் திறப்பு முதல் மேலும் பல தளர்வுகள்!

 

ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு:  டாஸ்மாக் திறப்பு முதல் மேலும் பல தளர்வுகள்!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்பான தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் 35 ஆயிரத்தை தாண்டி இருந்த கொரோனா பாதிப்பு ஊரடங்கு காரணமாக குறைந்துள்ளது. கடந்த மே 10 ஆம் தேதி முதல் 31தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது . இதை தொடர்ந்து ஜூன் 1 ஆம் முதல் 14 ஆம் தேதி வரை தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது.

ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு:  டாஸ்மாக் திறப்பு முதல் மேலும் பல தளர்வுகள்!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தளர்வுகள் என்னென்ன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கிறார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிகிறது. தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டித்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 27 மாவட்டங்களில் டோக்கன் முறையில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் 14ஆம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் ஒரு வாரம் என ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.