’மாஸ்க்’கை டிஸ்போஸ் செய்வதற்கு முன் செய்யவேண்டிய ஒரு விஷயம்!

 

’மாஸ்க்’கை டிஸ்போஸ் செய்வதற்கு முன் செய்யவேண்டிய ஒரு விஷயம்!

நியூ நார்மல்… நியூ நார்மல் என்ற வார்த்தை புழக்கத்தில் சகஜமாக வந்துவிட்டது. நியூ நார்மலில் முக்கியமாகச் சொல்லப்படுவது மாஸ்க் அணிந்துகொண்டே வெளியே செல்ல வேண்டும் என்பது.

மாஸ்க் அணிவது மிகவும் அவசியமானதே. கொரோனா பரவலைத் தடுக்கும், நம்மைத் தாக்காதிருக்கவும் மிகச் சிறந்த வழி மாஸ்க் அணிவதுதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதைக் கழற்றியபிறகு அதன் முன் பகுதியைத் தொடக்கூடாது என்பதையெல்லாம் இத்தனை நாட்களில் அறிந்திருப்பீர்கள்.

’மாஸ்க்’கை டிஸ்போஸ் செய்வதற்கு முன் செய்யவேண்டிய ஒரு விஷயம்!

நான் சொல்வது, மாஸ்க்கை பயன்படுத்தியப் பிறகு அப்படியே குப்பைத் தொட்டிக்குள்ளோ அல்லது வேறு வகையிலோ டிஸ்போஸ் பண்ணுவீர்கள்தானே… அப்படிச் செய்வதற்கு முன் ஒரே ஒரு விஷயத்தைச் செய்துவிட்டு டிஸ்போஸ் பண்ணுங்கள்.

மாஸ்க்கின் இருபுறமும் எலாஸ்ட்டி அல்லது துணியால் வார் கொடுக்கப்பட்டு அதை காதுகளில் மாட்டிக்கொள்வோம் அல்லவா… அந்த இரண்டையும் கட் பண்ணிவிட்டு டிஸ்போஸ் செய்யுங்கள்.

’மாஸ்க்’கை டிஸ்போஸ் செய்வதற்கு முன் செய்யவேண்டிய ஒரு விஷயம்!

அப்படியே டிஸ்போஸ் செய்வதால் என்னவென்று கேடாகும் என்பவர்கள் தயவுசெய்து இந்த வீடியோவைப் பாருங்கள். இரண்டு வார்களும் பறவைகளின் கால்களில் சிக்கிக்கொண்டு பறக்க முடியாமல் செய்துவிடுகின்றன. பறவைகளால் பறக்க முடியாவிட்டால் உணவுக்கு வழியேது. சீக்கிரமே இறந்துவிடும். இன்னும் வேறு பிரச்சனைகளும் வரக்கூடும். அவை என்னவென்று இப்போதைக்குத் தெரியவில்லை.

எனவே, மாஸ்க்கை டிஸ்போஸ் செய்கையில் அவசியம் இருபுறம் உள்ள காதில் மாட்ட உதவும் வார்களை நறுக்கி விடுங்கள்.