கல்லூரிகளில் 2 ஷிப்ட்க்கு பதில் ஒரே ஷிப்ட் ஆக மாற்றம் : தமிழக அரசு அரசாணை

 

கல்லூரிகளில் 2 ஷிப்ட்க்கு பதில் ஒரே ஷிப்ட் ஆக மாற்றம் : தமிழக அரசு அரசாணை

கொரோனா வைரஸ் தமிழகத்தை புரட்டி போட்டுள்ளது. கொரோன பரவுவதை கட்டுப்படுத்த ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் எப்போது கல்லூரிகள் திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இதனிடையே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல நாட்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பாடங்கள் குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கல்லூரிகளில் 2 ஷிப்ட்க்கு பதில் ஒரே ஷிப்ட் ஆக மாற்றம் : தமிழக அரசு அரசாணை
இந்த நிலையில், தமிழகத்தில் 50 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2 ஷிப்ட் முறை ஒரே ஷிப்ட் முறையாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் படி, காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கல்லூரியில் வகுப்புகள் நடைபெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், உட்கட்டமைப்பு வசதிகள் உருவானதும் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஒரே ஷிப்ட் முறை கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.