ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் இல்லாததால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

 

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் இல்லாததால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் திறக்காமல் ஆன்லைன் மற்றும் கல்வி சேனல்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பில் படிக்கும் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது ஒரு புறம் இருக்க, ஆன்லைன் வகுப்பில் பாடம் புரியவில்லை என்ற விரக்தியில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வதும் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது.

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் இல்லாததால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

திருச்சி மாநகரம் பீமநகர் ரெட்டித்தெரு கேசவன் மகள் வைஷ்ணவி(15). இவர் அதே பகுதியிலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாக கூறப்படுகிறது. வீட்டில் தூக்கிட்ட நிலையில், மீட்கப்பட்ட வைஷ்ணவி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வைஷ்ணவியின் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.