சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பலி! அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்

சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பலி! அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்

சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெயர் மணிமாறன் (57) சிறப்பு உதவி ஆய்வாளர் கடந்த 11ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அறிகுறிகள் இருந்ததால் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பலி! அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் மரணமடைந்தார். ஏற்கனவே சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய பாலமுரளி கொரோனா காரணமாக இறந்த நிலையில் சென்னை காவல் துறையில் இரண்டாவது இறப்பு சம்பவம் நடந்துள்ளது. சென்னை காவல்துறையில் இதுவரை 1155 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 462 போலீசார் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பலி! அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்

கொரோனாவால் மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் உருவப்படத்திற்கு தமிழக காவல்துறை இயக்குனரும், சட்டம்- ஒழுங்கு டிஜிபியுமான திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பட்டினப்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் மறைந்த மணிமாறனின் படத்திற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.