ஒரு லட்சம் கோவாக்சின் இன்று தமிழகம் வருகை!

 

ஒரு லட்சம் கோவாக்சின்  இன்று தமிழகம் வருகை!

கொரோனாவை தடுக்கும் வகையில் இந்தியாவில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்கும் வகையில் வெளிநாடு செல்வோர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் கோவாக்சின்  இன்று தமிழகம் வருகை!

தமிழகத்தை பொறுத்தவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மத்திய அரசு முறையாக தடுப்பூசி அளிக்காததால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.

ஒரு லட்சம் கோவாக்சின்  இன்று தமிழகம் வருகை!

இந்நிலையில் சென்னையில் கோவாக்சின் தட்டுப்பாட்டால் இன்றும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த சூழலில் தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இன்று காலை 11 மணிக்கு சென்னை வருகின்றன.இந்தியாவில் இதுவரை 38.14 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை 1,78,47,879கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.