கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை: படகுகளுக்கு தீ வைப்பு !

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை:  படகுகளுக்கு தீ வைப்பு !

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை:  படகுகளுக்கு தீ வைப்பு !

கடலூர் தாழங்குடா கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  ஊராட்சி தலைவர் மதியழகன்- முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாசிலாமணி தம்பி மதிவாணன்  வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு 25 படகுகளுக்கு தீவைக்கப்பட்டதுடன் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன.

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை:  படகுகளுக்கு தீ வைப்பு !

மோதல் நீடித்து வந்ததால் அங்கு போலீஸ் குவிக்கபட்டு வருகின்றனர். மதியழகன் தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீதும், மாசிலாமணி தரப்பைச் சேர்ந்த 50 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை:  படகுகளுக்கு தீ வைப்பு !

சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார். மோதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வருவாய் துறையினர், மற்றும் மீன்வளத்துறையினர் கணக்கெடுக்கும் பணியை துவங்கினர்.