அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

 

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஜார்ஜ் பிளாய்ட் – இந்தப் பெயர் அமெரிக்காவின் வரலாற்றில் இடம்பெரும் என மே மாதத்திற்கு முன் யாருக்கும் தெரியாது.

மே மாதம் 25 –ம் தேதி ஜார்ஜ் பிளாய்டை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறை பிடித்தது. அப்போது ஒரு காவலர் அவர் மீது காலை வைத்து அழுத்தியதில் மூச்சுத் திணறி இறந்தார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஜார்ஸ் பிளாய்ட்டின் மரணம் அமெரிக்காவில் பெரும் கலவரமாக மாறியது. நீண்ட காலத்திற்கு பிறகு கறுப்பு Vs வெள்ளை எனும் போராட்டம் தீவிரமாகத் தொடங்கியது.

அப்போது, பிளாக் லைவ்ஸ் மேட்டர் எனும் அமைப்பு உருவானது. அது தொடர்ந்து ஜார்ஸ் பிளாய்ட் கொலைக்கு நீதி வேண்டியும் கறுப்பினத்திற்கு எதிரான போக்கையும் கண்டித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

கொரோனா ஊரடங்கை மீறியும் பல இடங்களில் இந்த அமைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. இதனால், காவல் துறையினருக்கு பெரும் இடையூறாக இருந்து வருவதாகக் கருதுகின்றனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

அதேபோல நேற்றும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் அமைப்பினர் போர்ட்லேண்டில் போராட்டம் நடத்தினர். அங்கு இருந்த ட்ரம்ப் ஆதரவாளர்களுடன் மோதல் ஏற்பட்டு கலவரமானது.

இந்தக் கலவரத்தில் துப்பாக்கிச் சூடும் நடந்தது. அதில் ஒருவர் பலியானார். யார் துப்பாக்கியால் சுட்டது… பலியானது யார் என்பதெல்லாம் இன்னும் தெரியவில்லை. ஆனால், இந்த விவகாரம் அமெரிக்க தேர்தல் முடிவில் எதிரொலிக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.