‘ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் ஒரு விவசாயி மரணம்’ : டெல்லியில் போராடும் விவசாயிகள் ஆதங்கம்!

 

‘ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் ஒரு விவசாயி மரணம்’ : டெல்லியில் போராடும் விவசாயிகள் ஆதங்கம்!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் இதுவரை 60 பேர் உயிரிழந்திருப்பதாக பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவ.26ம் தேதி டெல்லியை நோக்கி படையெடுத்தனர். போலீசார்கள் அவர்களை தடுப்பதற்காக, கையிலெடுத்த எந்த நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை. பல தடைகளை மீறி முன்னேறிச் சென்ற விவசாயிகள், டெல்லியின் புராரி மைதானத்தில் முகாமிட்டனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிடில் ஒரு வருடம் ஆனாலும் இந்த போராட்டம் ஓயாது என்று திட்டவட்டமாக தெரிவித்த விவசாயிகள், தொடர்ந்து 40ஆவது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

‘ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் ஒரு விவசாயி மரணம்’ : டெல்லியில் போராடும் விவசாயிகள் ஆதங்கம்!

டெல்லியின் முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு அதனை கண்டு கொள்ளாததால், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி நோக்கி டிராக்டரில் பேரணி நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே, போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாய அமைப்புகளுடன் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. இது ஒரு புறமிருக்க, டெல்லியில் நிலவி வரும் கடும் குளிரால் விவசாயிகள் பலர் உயிரிழக்கவும் நேர்ந்தது.

‘ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் ஒரு விவசாயி மரணம்’ : டெல்லியில் போராடும் விவசாயிகள் ஆதங்கம்!

இந்த நிலையில், டெல்லி போராட்டத்தில் ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி உயிரிழப்பதாக பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிலவும் கடும் குளிராலும் மாரடைப்பாலும் இதுவரை 60 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாகவும் கோரிக்கையை பரிசீலனை செய்யவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்று விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.