ஒரே மாதத்தில் ஒரு கோடி அதிகரிப்பு – உலகளவில் கொரோனா

 

ஒரே மாதத்தில் ஒரு கோடி அதிகரிப்பு – உலகளவில் கொரோனா

நவம்பர் 24-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 95 லட்சத்து  14 ஆயிரத்து 826 பேர். இதே சென்ற மாதம் 24 ம் தேதியன்று 4 கோடியே 24 லட்சத்து  97 ஆயிரத்து 379 பேராக இருந்தது, ஒரே மாதத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பாதிப்புகள் அதிகரித்துவிட்டது.     

ஒரே மாதத்தில் ஒரு கோடி அதிகரிப்பு – உலகளவில் கொரோனா

இன்றைய காலைவரை, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 11 லட்சத்து 56 ஆயிரத்து 663 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 02 ஆயிரத்து 028 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,69,56,135 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 1,27,77,174 பேரும், இந்தியாவில் 91,77,840 பேரும், பிரேசில் நாட்டில்  60,88,004 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒரே மாதத்தில் ஒரு கோடி அதிகரிப்பு – உலகளவில் கொரோனா

 இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் அமெரிக்காவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

அமெரிக்காவில் 1,72,103 பேரும், பிரேசிலில் 16,603 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். இந்தியாவில் 37,410 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் இந்தியா, பிரேசில் நாடுகளை விடவும் அமெரிக்காவில் அதிகம்.