கதவை உட்புறமாக தாழிட்டுக்கொண்டு தவித்த ஒன்றரை வயது குழந்தை… 5 மணிநேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

 

கதவை உட்புறமாக தாழிட்டுக்கொண்டு தவித்த ஒன்றரை வயது குழந்தை… 5 மணிநேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் கதவை உட்புறமாக தாழிட்டுக் கொண்டு திறக்க முடியாமல் தவித்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை தீயணைப்பு துறையினர் 5 மணிநேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

திண்டுக்கல் நகர் மேங்கில்ஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சிவகாமி நாதன். இவரது ஒன்றரை வயது ஆண் குழந்தை ஆஷிவ் அதர்வா. நேற்று வீட்டினுள் இருந்த குழந்தை அறையின் கதவை உட்புறமாக சாத்தி உள்ளது. தானியங்கி வகையிலான அந்த கதவு உட்புறமாக பூட்டிக் கொண்டுள்ளது. இதனால் அறையில் சிக்கிக் கொண்ட குழந்தை வெளியே வர முடியாமல் கதறியது.

கதவை உட்புறமாக தாழிட்டுக்கொண்டு தவித்த ஒன்றரை வயது குழந்தை… 5 மணிநேரம் போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

சாவி அறையின் உள்ளே இருந்ததால் வீட்டில் இருந்தவர்களாலும் குழந்தையை மீட்க முடியவில்லை. இதனை அடுத்து உடனடியாக திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் குழு ஹைட்ராலிக் டோர் ஓபனர் கருவி மூலமாக லாவமாக கதவை திறந்து குழந்தை பத்திரமாக மீட்டனர்.

இதனால், 5 மணிநேரம் போராடிய குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். வீட்டிற்குள் குழந்தை சிக்கிக் கொண்டு தவித்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.