ஒன்றிணைவோம் வா என்று வசனம் பேசிய கோமாளி! – ஸ்டாலினை விமர்சிக்கும் அம்மா நாளிதழ் ஆசிரியர்

 

ஒன்றிணைவோம் வா என்று வசனம் பேசிய கோமாளி! – ஸ்டாலினை விமர்சிக்கும் அம்மா நாளிதழ் ஆசிரியர்

ஒன்றிணைவோம் வா என்று வீர வசனம் பேசிய கோமாளி தலைமையின் தவறான வழிகாட்டுதலுக்கு பலியான அன்பழகன் என்று நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

ஒன்றிணைவோம் வா என்று வசனம் பேசிய கோமாளி! – ஸ்டாலினை விமர்சிக்கும் அம்மா நாளிதழ் ஆசிரியர்

இதனால் அ.தி.மு.க-வினர் எரிச்சலடைந்துள்ளனர். தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்கிறது, இந்த நிலையில் தி.மு.க தனியாக உதவி செய்யத் தேவையில்லை என்று கூறிக்கொண்டே இவர்களும் ஆங்காங்கே உதவிகள் செய்துகொண்டேதான் இருக்கின்றன.

ஒன்றிணைவோம் வா என்று வசனம் பேசிய கோமாளி! – ஸ்டாலினை விமர்சிக்கும் அம்மா நாளிதழ் ஆசிரியர்இந்த நிலையில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் இன்று உயிரிழந்தார். பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளிதழின் ஆசிரியரான மருது அழகுராஜ் என்பவர் வெளியிட்ட பதிவு தி.மு.க-வினர் மற்றும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://


அவருடைய பதிவில், “ஒன்றிணைவோம் வா என்று ஒவ்வாத வசனம் பேசிய, ஒரு கோமாளித் தலைமையின் கூறுகெட்ட வழிகாட்டுதலுக்கு கொடுக்கப்பட்ட விலை, கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் முறையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் பலி. பரிதாபத்திற்குரிய உயிருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறியுள்ளார்.
தி.மு.க-வினர் அவருக்கு எதிராக பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், மருது அழகுராஜ் சில தினங்களுக்கு முன்பு மக்களுக்கு நல உதவிகள் வழங்கிய படத்தை வெளியிட்டு இவர் மட்டும் செய்யலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.