மீண்டும் சைக்கிள் மீது காதல் கொள்ள தொடங்கிய மக்கள்… உபயம்: கொரோனா வைரஸ்

 

மீண்டும் சைக்கிள் மீது காதல் கொள்ள தொடங்கிய மக்கள்… உபயம்: கொரோனா வைரஸ்

நவீன மற்றும் அவசர உலகம் மற்றும் போக்குவரத்து வளர்ச்சியால் கடந்த பல ஆண்டுகளாக சைக்கிள் ஒன்று இருப்பதையே மக்கள் குறிப்பாக நகரவாசிகள் மறந்து விட்டனர். வீட்டுக்கு வீடு சைக்கிள் இருந்த காலம் மலையேறி விட்டது. தற்போது ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் பைக் அல்லது ஸ்கூட்டர் உள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் விளைவாக மக்கள் தற்போது மீண்டும் சைக்கிளை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

மீண்டும் சைக்கிள் மீது காதல் கொள்ள தொடங்கிய மக்கள்… உபயம்: கொரோனா வைரஸ்

கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, டெல்லி, கொச்சி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் மக்கள் பணிக்கு செல்ல, வேலைகள் செய்ய அல்லது உடற்பயிற்சிக்காக மீண்டும் சைக்கிளை மிதிக்க தொடங்கி விட்டனர். கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பஸ்களில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே பயணிக்க அனுமதிப்படுவதால் வேலைக்கு செல்வோர் பஸ் நிலையங்களில் மணிக்கணக்கில் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய சூழல். ஆட்டோ, கால் டாக்சி போன்றவற்றில் பயணம் செய்வது பெரும்பாலான பணியாளர்களுக்கு கட்டுப்பிடி ஆகாது. ஆக, எடு சைக்கிளை என மீண்டும் சைக்கிளை மிதித்து வேலைக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

மீண்டும் சைக்கிள் மீது காதல் கொள்ள தொடங்கிய மக்கள்… உபயம்: கொரோனா வைரஸ்

டெல்லியின் மத்திய தலைமை செயலக பகுதியில் வேலைபார்க்கம் சாந்த் ராம் கூறுகையில், போக்குவரத்து பயன்பாடு அதிகமாக இருக்கும் நேரத்தில், பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை. எனது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் இடையிலான 10 கி.மீட்டர் தொலைவை சைக்களில் பயணிப்பது சிறந்த தேர்வு என நான் கண்டுபிடித்தேன் என தெரிவித்தார். இது சாந்த் ராம் ஒருவரின் குரல் மட்டுமல்ல பல லட்சம் நகரவாசிகளின் குரலும் இதே போன்றுதான் ஒலிக்கிறது. போக்குவரத்து மற்றும் போக்குவரத்து திட்டமிடல் இயக்குநரகம் மதிப்பீட்டின்படி, கடந்த ஜூன் 1ம் தேதி முதல் கொல்கத்தா சாலைகளில் 15 லட்சம் மக்கள் சைக்கிளில் வலம் வருகின்றனர். லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட முதல் நாட்டின் அனைத்து நகரங்களிலும் சைக்கிள் விற்பனை சூடு பிடித்துள்ளதாக சைக்கிள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.