ஓணம் பண்டிகை : சென்னை, குமரி, கோவையில் உள்ளூர் விடுமுறை!

 

ஓணம் பண்டிகை : சென்னை, குமரி, கோவையில் உள்ளூர் விடுமுறை!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை, கோவை,கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகை : சென்னை, குமரி, கோவையில் உள்ளூர் விடுமுறை!

கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. திருமால் வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையிலும் வைத்து, அவனது செருக்கினை அடக்கி, அழித்ததோடு, மகாபலி சக்கரவர்ததி வேண்டியபடி, ஆண்டுக்கு ஒருமுறை தன் நாட்டு மக்களை காண திருமால் அருள் புரிந்தார். அதன்படி, மகாபலி சக்கரவர்த்தி மக்களை காணவரும் நாளே திருவோணத் திருநாளாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகை : சென்னை, குமரி, கோவையில் உள்ளூர் விடுமுறை!

இந்நிலையில் இந்தாண்டு குமரி மக்கள் வீடுகளில் கோலமிட்டு அதில் விளக்கேற்றி ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டை போல இந்தாண்டு பொது இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை, கோவை,கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 12ஆம் தேதியை பணிநாளாக அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.