ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை!

ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை!

கேரளாவின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று முன்தினம் தொடங்கியது. ஓணம் பண்டிகையின் போது கேரள மக்கள் பூக்களால் கோலமிட்டு தங்களின் பாரம்பரிய உடை அணிந்து இறைவனை வழிபடுவர். ஆனால் இம்முறை கொரோனா காரணமாக ஓணம் பண்டிகை களையிழந்துள்ளது. ஓணம் பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட கூடாது என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை!

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் மலையாளம் பேசும் மக்கள் அதிக அளவில் வசித்து வருவதால் அங்கும் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.

ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை!

இந்நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஓணம் பண்டிகையன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக வேறொரு நாளில் அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.