பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஈரோடு கடை வீதிகளில் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்…

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஈரோடு கடை வீதிகளில் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்…

ஈரோடு

ஈரோட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஈரோடு கடை வீதிகளில் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்…

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஈரோடு நகரில் கொல்லம்பாளையம், ஈஸ்வரன் கோயில் வீதி, பன்னீர்செல்வம் பார்க், கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வியாபாரிகள் கரும்பு, மஞ்சள், மண்பானை, விற்பனை கடைகள் அமைத்திருந்தனர். இங்கு காலை முதலே ஏராளமான பொதுமக்கள் கரும்பு, புதுப்பானை உள்ளிட்ட பூஜை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதேபோல், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், உழவர் சந்தைகளிலும் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஈரோடு கடை வீதிகளில் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்…

அங்கு வந்திருந்த பொதுமக்கள் பொங்கலுக்காக கட்டுக்காட்டாக கரும்புகளை வாங்கி சென்றனர். முன்னதாக, இன்று போகி பண்டிகையொட்டி, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்து கோலமிட்டனர். மேலும், வேப்பிலை, ஆவாரம்பூ, பூலாம்பூ போன்றவற்றை சாலையோர கடைகளில் அதிகளவு விற்பனைக்காக வைத்திருந்தனர். இதனிடையே, போகி பண்டிகையை ஒட்டி நகர் பகுதியில் பிளாஸ்டிக் டயர், துணிகள், கியூப் போன்றவற்றை எரிக்க மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.