நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் கேலிக்குள்ளாக்கப்படுவதை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும்- ஓ பிரையன்

 

நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் கேலிக்குள்ளாக்கப்படுவதை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும்- ஓ பிரையன்

சர்வதேச ஜனநாயக தினத்தன்று, நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் கேலிக்குள்ளாக்கப்படுவதை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை நடவடிக்கையில் கலந்து கொண்ட பிறகு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஒ பிரையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது: இன்று ஜனநாயகத்திற்கான சர்வதேச நாள், ஆனால் நாம் நாடாளுமன்றத்தில் காண்பது மொத்த கொலை, ஜனநாயகத்தை கேலி செய்வது. ஒரு வழக்கமான அமர்வு வரலாற்றில் இது போன்ற விஷயம் நடந்தது இதுவே முதல் முறை. இது கடைசியாக 1962ல் சீன படையெடுப்பின் போது நடந்தது. நேரம் 30 நிமிடங்களாக வரையறுக்கப்பட்டடுள்ளதால் பூஜ்ய நேரத்தின் பெயரும் மாற்றப்பட வேண்டும். அநேகமாக அடுத்த அமர்வில் இது 2 நிமிடங்கள் மட்டுமே இருக்கும்.

நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் கேலிக்குள்ளாக்கப்படுவதை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும்- ஓ பிரையன்
டெரெக் ஒ பிரையன்

மசோதக்களில் 3ல் ஒரு பகுதி மட்டுமே எந்தவொரு நாடாளுமன்ற குழுவின் ஆய்வுக்கு செல்கிறது. எதிர்க்கட்சிக்கு எந்தவாய்ப்பும் வழங்கப்படவில்லை. இது அவசர ராஜ். 11 அவசரசட்டங்கள் வந்து விட்டன. ஆனால் எந்தவொரு குழுவிற்கும் செல்லவில்லை. சர்வதேச ஜனநாயக தினத்தன்று, இங்கு ஜனநாயகம் கேலிக்குள்ளாக்கப்படுவதை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் கேலிக்குள்ளாக்கப்படுவதை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும்- ஓ பிரையன்
மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் 12 பக்க அறிக்கையை படித்தார். அவர் ஒரு முறை வாழ்த்து என்ற வார்த்தையை பிரதமருக்கு மட்டுமே பயன்படுத்தினார். கொரோனாவுடன் போராடும் மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், துப்புரவாளர்கள் பற்றி என்ன? இந்த போராட்டத்தில் பலரும் தங்களது உயிரை இழந்துள்ளனர். சுகாதாரத்துக்காக ரூ.100 செலவிட்டால் அதில் 65 ரூபாயை மாநிலம் ஏற்றுக்கொள்கிறது. எஞ்சிய 35 ரூபாயை மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. தொற்றுநோயை கட்டுப்படுத்த மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. இந்த கேள்விகளை நாளை (இன்று) மாநிலங்களவையில் எழுப்பபோகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.