இன்று சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி காலை 6.30 மணிக்கு தேசத்துக்கு உரையாற்றுகிறார்

இன்று சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி காலை 6.30 மணிக்கு தேசத்துக்கு உரையாற்றுகிறார்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி காலை 6.30 மணிக்கு யோகா நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச யோகா தினத்தை உலக நாடுகள் கொண்டாடுகின்றன. உலகம் முழுவதும் இன்று யோகா தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. நம் நாட்டிலும் யோகா தொடர்பான நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகிறது.

இன்று சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி காலை 6.30 மணிக்கு தேசத்துக்கு உரையாற்றுகிறார்
பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு யோகா தினத்தின் முன்னணி நிகழ்வு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருக்கும். மேலும் அனைத்து தூர்தர்ஷன் சேனல்களிலும் நாளை (இன்று) காலை 6.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகிறார்.

இன்று சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி காலை 6.30 மணிக்கு தேசத்துக்கு உரையாற்றுகிறார்
யோகா தினம்

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், நாளை (இன்று) ஜூன் 21, 7வது யோகா தினத்தை குறிப்போம். இந்த ஆண்டு கரு ஆரோக்கியத்திற்கான யோகா. இது உடல் மற்றும் மன நலனுக்காக யோகா பயிற்சி செய்வதில் கவனம் செலுத்துகிறது. நாளை (இன்று) காலை 6.30 மணிக்கு யோகா தின நிகழ்ச்சியில் உரையாற்றுவேன் என பதிவு செய்து உள்ளார்.