மார்ச் 7ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்.. ஒரே மேடையில்!

 

மார்ச் 7ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்.. ஒரே மேடையில்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர் நேர்காணலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. அதிமுகவுடன் பாமக, பாஜக, தேமுதிக கூட்டணி அமைக்கிறது. அதே போல திமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. கமல்ஹாசன் கட்சியின் கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை. இதனிடையே, தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்தார்.

மார்ச் 7ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்.. ஒரே மேடையில்!

117 தொகுதிகளில் ஆண்கள், 117 தொகுதிகளில் பெண்கள் என 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் திருவெற்றியூர் அல்லது காரைக்குடிதொகுதியில் தான் போட்டியிடவிருப்பதாகவும் சீமான் தெரிவித்திருந்தார். அதோடு, வேட்பாளர்களை முதல் ஆளாக அறிவிப்பேன் என்றும் அவர் உறுதியளித்திருந்தார். அதற்கான பணிகளிலும் விறுவிறுப்பாக செய்து வந்தார்.

இந்த நிலையில், மார்ச் 7ம் தேதியன்று சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என சீமான் அறிவித்துள்ளார். 117 தொகுதிகளில், ஆண்கள் 117 தொகுதிகளில் பெண்கள் என 234 தொகுதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்றும் கூட்டத்தில் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு ஆவணமும் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.