ஶ்ரீரங்கம் கோயில் சார்பில், அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு சீர்வரிசை அளிப்பு

ஶ்ரீரங்கம் கோயில் சார்பில், அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு சீர்வரிசை அளிப்பு

திருச்சி

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆயலத்தில் இருந்து, தங்கை அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கும் வைபவம் நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஶ்ரீரங்கம் கோயில் சார்பில், அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு சீர்வரிசை அளிப்பு

ஹரியும், சிவனும் ஒன்று என்பதனை எடுத்துரைக்கும் விதமாக பண்டைய காலத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்களை இணைக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இவை நிறுத்தப்பட்ட போதிலும், ஆண்டுதோறும் மார்கழி மாத பிறப்பின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், தனது தங்கையான அகிலாண்டேஸ்வரிக்கு சீர் வழங்கும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.

ஶ்ரீரங்கம் கோயில் சார்பில், அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு சீர்வரிசை அளிப்பு

இதனையொட்டி, நேற்று இரவு ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து பட்டுப் புடைவைகள், பீதாம்பரங்கள், வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்கள் அடங்கிய சீர் வரிசைகளை அமைச்சர் வளர்மதி தலைமையில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், பட்டாச்சார்யர்கள் உள்ளிட்டோர் ஊர்வலமாக திருவானைகோயிலுக்கு கொண்டு சென்றனர். பின்னர், அந்த பொருட்கள் கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் அர்ச்சகர்களிடம் வழங்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்பாளை வழிபட்டுச்சென்றனர்.