காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இருக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன்- ஓமர் அப்துல்லா உறுதி

காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இருக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன்- ஓமர் அப்துல்லா உறுதி

2019 ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசமாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்னதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். 232 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 24ம் தேதியன்று ஓமர் அப்துல்லா காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இருக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன்- ஓமர் அப்துல்லா உறுதி

இந்நிலையில் முன்னணி நாளிதழில் ஓமர் அப்துல்லா எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது: ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இருக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன். 70 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை மாற்ற, ஜம்மு அண்டு காஷ்மீர் மக்களுக்கு அளித்த இறையாண்மை பொறுப்புகளை தவிர்க்கவும், மாநில அந்தஸ்த்தை நீக்கவும் நாடாளுமன்றம் ஒரு நாளைக்கும் குறைவான நேரத்தையே செலவழித்தது. முதல் முறையான ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக தகுதி குறைக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இருக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன்- ஓமர் அப்துல்லா உறுதி

370வது பிரிவை ரத்து செய்வது காஷ்மீரில் பயங்கரவாதத்தை தடுக்க உதவும் என்ற மத்திய அரசு, ஒரு வருடம் கழித்து ஜம்மு அண்டு காஷ்மீரில் வன்முறை அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் கூறியது ஏன்?. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட வெறும் அரசியல் நடவடிக்கைதான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம். அதற்கு அரசியலமைப்பு, பொருளாதார அல்லது பாதுகாப்பு நியாயங்கள் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.