தேர்தலில் தோல்வி… காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை மோடி அரசு வெகுவிரைவில் நடத்தாது.. உமர் அப்துல்லா

 

தேர்தலில் தோல்வி… காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை மோடி அரசு வெகுவிரைவில் நடத்தாது.. உமர் அப்துல்லா

ஜம்மு அண்டு காஷ்மீரின் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி கண்டதால், யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலை வெகுவிரைவில் நடத்தாது என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவா் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

ஜம்மு அண்டு காஷ்மீரில் 288 தொகுதிகளுக்கான மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் மொத்தம 8 கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி அதிகபட்சமாக 112 இடங்களில் வெற்றி பெற்றது. அதேசமயம் பா.ஜ.க. 75 இடங்களை கைப்பற்றியது. இந்த சூழ்நிலையில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி கண்டதால், ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவைக்கு மத்திய அரசு சீக்கிரமாக தேர்தல் நடத்தாது என்று தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

தேர்தலில் தோல்வி… காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை மோடி அரசு வெகுவிரைவில் நடத்தாது.. உமர் அப்துல்லா
பிரதமர் மோடி

உமர் அப்துல்லா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: இந்த தோல்வியால், பா.ஜ.க. அரசு எந்தநேரத்திலும் விரைவாக சட்டப்பேரவை தேர்தலை நடத்தாது என்று நான் நினைக்கிறேன். பா.ஜ.க. அரசுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால், புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசத்துக்கு (ஜம்மு அண்டு காஷ்மீர்) சட்டப்பேரவை தேர்தலை இப்போது அறிவித்து இருப்பார்கள். ஆகையால் எங்களுக்கு எங்கள் கட்சியை வலுப்படுத்த நேரம் உள்ளது.

தேர்தலில் தோல்வி… காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை மோடி அரசு வெகுவிரைவில் நடத்தாது.. உமர் அப்துல்லா
மக்கள் கூட்டணி தலைவர்கள்

எங்கள் அமைப்பில் சில இடங்களில் பலவீனங்கள் உள்ளதை ஒப்புக்கொள்கிறோம். இந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்வோம் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அது முடியவில்லை. தேசிய மாநாட்டு கட்சிக்கு எதிராக நீங்கள் என்ன செய்தாலும் அது ஒன்றுமில்லை என்பதை இந்த தேர்தல் நிரூபணம் செய்துள்ளது. அதன் இருப்புக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்கமுடியாது. சர்வவல்லமையுள்ளவர் (இறைவன்) அல்லது மக்களுக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. பொய் மற்றும் பிரச்சாரங்களை பரப்புங்கள் ஆனால் ஒருநாள் உண்மை வெளிவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.