வீட்டுக்காவலில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்!

 

வீட்டுக்காவலில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்!

எவ்வித விளக்கமும் இன்றி ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் அவர் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா குடும்பத்துடன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 2ஆம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தன்னையும், தந்தை ஃபரூக் அப்துல்லா உட்பட தனது குடும்ப உறுப்பினர்களையும் எவ்வித காரணமும் இன்றி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீட்டுக்காவலில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்!

எந்த ஒரு விளக்கமும் இன்றி வீட்டுக்காவலில் வைப்பதுதான் புதிய ஜனநாயகாம் எனவும் உமர் அப்துல்லா சொல்லி இருக்கார்.

முன்னதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.