ஒலிம்பிக் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா – நடுநடுங்கும் ஒலிம்பிக் கிராமம்!

 

ஒலிம்பிக் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா – நடுநடுங்கும் ஒலிம்பிக் கிராமம்!

கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு தொடர்கள் ரத்து செய்யப்பட்டன. ஒருசில போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் பிரபல ஒலிம்பிக் தொடரும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் அந்தத் தொடரை இம்மாதம் நடத்த ஒலிம்பிக் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் தொடரை நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஒலிம்பிக் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா – நடுநடுங்கும் ஒலிம்பிக் கிராமம்!

இதற்கான பணிகள் விறுவிறுப்படைந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் வீரர்கள், அதிகாரிகளை தங்கவைக்கவும் தனியாக ஒரு கிராமத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இங்கு யாரும் வெளியாட்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல உள்ளே வருபவர்களுக்கு பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்தபிறகே அனுமதிக்கப்படுவார்கள். தொடர் ஆரம்பாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பல்வேறு நாட்டு வீரர்களும் அவர்களின் பயிற்சியாளர்களும் டோக்கியோவுக்கு சென்றுள்ளனர்.

ஒலிம்பிக் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா – நடுநடுங்கும் ஒலிம்பிக் கிராமம்!

இவ்வாறு பல கட்டுப்பாடுகளையும் மீறி ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா நுழைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கிராமத்திலிருந்த ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக ஒலிம்பிக் தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறினார். இதையடுத்து அங்கு வழக்கமாக எடுக்கப்படும் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா – நடுநடுங்கும் ஒலிம்பிக் கிராமம்!

பரிசோதனை செய்ததில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த வீரர்கள் யார் என்று தகவலை தெரிவிக்கவில்லை. இதுவரை ஒலிம்பிக் போட்டிக்கு வந்தவர்களில் 10 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வீரர்களுடன் வந்தவர்கள், ஒருவர் ஒப்பந்ததாரர், ஒருவர் பத்திரிகையாளர். அதேபோல ஒலிம்பிக் போட்டியைக் காண வந்தவர்களில் 55 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.