Home விளையாட்டு 7 வாரங்களில் ஒலிம்பிக்… ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர்!

7 வாரங்களில் ஒலிம்பிக்… ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிருந்த மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 125 கிலோ எடைப்பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளவிருந்தார் மாலிக். பல்கேரியாவில் நடந்துமுடிந்த தகுதிச் சுற்று போட்டியில், இறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தார். இதனால் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.

7 வாரங்களில் ஒலிம்பிக்… ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர்!
Olympic bound wrestler Sumit Malik fails dope test, provisionally suspended  | TV9News

இதனிடையே பல்கேரியா போட்டியின்போது சுமித் மாலிக்கிற்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாலிக்கின் சிறுநீரில் Methylhexanamine — 5-methylhexan-2-amine (1,4-dimethylpentylamine) ஆகியவற்றின் கூட்டுக் கலவையிலான மருந்து ஒன்று இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த மருந்தானது தடை செய்யப்பட்டதாகும். ஊக்க மருந்து சோதனையில் மாலிக் சிக்கியிருப்பதால் அவருக்கு இந்தாண்டு டிசம்பர் மாதம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Olympic-bound wrestler Sumit Malik fails dope test, provisionally suspended  | More sports News - Times of India

இதன் காரணமாக அவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளவும் தடை ஏற்பட்டுள்ளது. 125 கிலோ எடைப்பிரிவில் அவர் ஒருவர் மட்டுமே இருந்தால் என்பதால், இந்தியா சார்பில் வேறு எவரும் அந்தப் பிரிவில் பங்கேற்க மாட்டார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மாலிக் பதக்கம் வென்று தரும் வீரராகப் பார்க்கப்பட்டார். ஒலிம்பிக்கில் நிச்சயம் இந்தியாவிற்குப் பதக்கம் வாங்கி கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இவ்விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Sumit Malik becomes seventh Indian wrestler to qualify for Tokyo Olympics

மாலிக் செய்த குற்றத்திற்காக சர்வதேச மல்யுத்த அமைப்பான உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு 16 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஒலிம்பிக் தொடருக்கு தயாராவதற்கு முன்பே கடந்த மாதம் ஹரியானா விளையாட்டு துறை சார்பில் அவருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதனை மாலிக் திருப்பித் தர வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மாலிக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவர் அபராதம் செலுத்தவில்லை என்றால் அவருக்கு விளையாட்டுப் போட்டிகளில் ஆயுள் தடை செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மாலிக் 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

7 வாரங்களில் ஒலிம்பிக்… ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் என சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்...

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை...
- Advertisment -
TopTamilNews