போராட்டம்னு வந்துட்டா… பேரணியில் சிங்க நடை போடும் பாட்டி!

 

போராட்டம்னு வந்துட்டா… பேரணியில் சிங்க நடை போடும் பாட்டி!

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாசிக்கிலிருந்து மும்பை நோக்கிய விவசாயிகள் பேரணியில் மூதாட்டி ஒருவர் கம்பீரமாக நடந்துவரும் வீடியோ வைரலாகியிருக்கிறது.

இளைஞர்களைக் காட்டிலும் முதியவர்களின் போராட்டக்குணம் சற்றே மூர்க்கத்தனமாகவே இருக்கும். போராட்டம் என்று வந்துவிட்டால் ஒரு கை பார்த்து விடலாம் என்றே இறங்குவார்கள். அவர்களைப் பார்த்தாலே நமக்குள்ளே ஒரு போராட்ட வெறி ஊறும். அவர்களின் போராட்டக்குணம் நம்மை ஆச்சரியர்த்தில் ஆழ்த்த வைக்கும்.

உதாரணமாக, தமிழ்நாட்டில் எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் வேலையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெண்மணி அதிகாரிகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த மூதாட்டி கை ஓங்கி தில்லாக ஆர்ப்பாட்டம் செய்தார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி செம டிரெண்டானது.

போராட்டம்னு வந்துட்டா… பேரணியில் சிங்க நடை போடும் பாட்டி!

தற்போது டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்திலும் முதியவர்கள் பலர் கெத்தாக போராடிக் கொண்டுவருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் பேரணியில் ஈடுபடுகின்றனர்.

அவ்வாறு நடைபெற்ற ஒரு பேரணியில் நாசிக்கிலிருந்து மும்பை நோக்கி மூதாட்டி ஒருவர் இளைஞர்களுக்கு இணையாக பீடுநடை போடுகிறார். அவரின் விவரம் எதுவும் தெரியவில்லை. அந்த மூதாட்டி கம்பு ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு வீரநடை போடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.