`இடைவிடாது செல்போனில் பேச்சு; நடத்தையில் சந்தேகம்!’- 62 வயது மனைவியை கொடூரமாக கொன்ற 75 வயது கணவர்

 

`இடைவிடாது செல்போனில் பேச்சு; நடத்தையில் சந்தேகம்!’- 62 வயது மனைவியை கொடூரமாக கொன்ற 75 வயது கணவர்

62 வயதில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த 75 வயது கணவன் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்ததோடு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெருங்களத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் விவேக் நகர் 5,வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 200,க்கும் மேற்பட்டோர் குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடியிருப்பில் 75 வயதுடைய ஜெகநாதன், தனது 62 வயதுடைய மனைவி சுலோச்சனாவுடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு மூன்று பெண்கள் பிள்ளைகளும், ஒரு மகனும் உள்ளனர். பெண்களுக்கு திருமணமாகி சென்னையில் இருந்து வருகின்றனர். மகன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். பிள்ளைகள் யாரும் வீட்டில் இல்லாததால் தனது மனைவி மீது அதிக பாசம் உடையவராக இருந்துள்ளார் ஜெகநாதன். மனைவி என்ன கேட்டாலும் அதை உடனே வாங்கிக் கொடுத்துவிடுவாராம் ஜெகநாதன்.

`இடைவிடாது செல்போனில் பேச்சு; நடத்தையில் சந்தேகம்!’- 62 வயது மனைவியை கொடூரமாக கொன்ற 75 வயது கணவர்

இந்த சூழ்நிலையில், மனைவி சுலோச்சனா அதிக நேரம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பெருங்களத்தூா் பகுதியில் நேற்று திடீரென மழை பெய்தது. இதனால் மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க சென்ற பக்கத்து வீட்டை சோ்ந்த ஒருவா் மேலே மாடிக்கு சென்றுள்ளார். அப்போது, தண்ணீா் டேங்க்கிற்கு வரும் குழாயில் ஜெகநாதன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தை பாா்த்து அதிா்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அவருடைய மனைவியிடம் சொல்வதற்காக வீட்டிற்கு வந்த அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ரத்த வெள்ளத்தில் சுலோச்சனா படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

உடனடியாக அப்பகுதி மக்கள் பீர்க்கன்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் கணவன், மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஒரு மாத காலமாகவே ஜெகநாதன் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி சுலோச்சனா அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்ததால் மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை தகாத வார்த்தையால் திட்டியும் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

`இடைவிடாது செல்போனில் பேச்சு; நடத்தையில் சந்தேகம்!’- 62 வயது மனைவியை கொடூரமாக கொன்ற 75 வயது கணவர்
மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் தான் ஜெகநாதன் வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியின் கழுத்து மற்றும் மார்பக பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்த கேபிள் ஒயர் மூலமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணத்துக்காக இந்த சம்பவம் நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் மேலும் விசாரித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் கணவன்- மனைவி இறந்துகிடந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.