பழங்கால வெடிகுண்டு கண்டெடுப்பு.. சென்னை அருகே பரபரப்பு!

 

பழங்கால வெடிகுண்டு கண்டெடுப்பு.. சென்னை அருகே பரபரப்பு!

சென்னை புறநகர் பகுதியான பெரியபாளையத்தில் வசித்து வரும் சிறுவர்கள், கடந்த 7ஆம் தேதி கிரிக்கெட் விளையாடுவதற்காக மைதானத்துக்கு சென்றுள்ளனர். அங்கு ஸ்டம்புகளை மண்ணில் புதைப்பதற்காக மண்ணைத் தோன்றியுள்ளனர். அப்போது ஒரு பெரிய இரும்புக் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பழங்கால வெடிகுண்டு கண்டெடுப்பு.. சென்னை அருகே பரபரப்பு!

விரைந்து வந்த போலீசார், சிறுவர்கள் கண்டெடுத்தது பழங்கால வெடிகுண்டு என தெரிவித்துள்ளனர். இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் 8 கிலோ எடை கொண்ட அந்த வெடிகுண்டை கைப்பற்றியுள்ளனர். பின்னர் அதை ஆய்வு செய்து, வெடிகுண்டின் முன்பக்கத்தில் தீ வைத்தால் மட்டுமே அது வெடிக்கும் தன்மை கொண்டதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அந்த வெடிகுண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட பின்னர் அழிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின் போது தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் பல கடலில் கொட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. அவை அவ்வப்போது கரை ஒதுங்கி மக்களால் கண்டெடுக்கப்படுவது வழக்கமான ஒன்று தானாம். அதற்கான சான்றுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.