ஸ்மார்ட்போன் மூலம் லாக், அன்லாக்… 90/120 கிமீ ஸ்பீடில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர்! – விலை எவ்வளவு தெரியுமா?

ஸ்மார்ட்போன் மூலம் லாக், அன்லாக்… 90/120 கிமீ ஸ்பீடில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர்! – விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உருவாக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்துவருகிறது. இந்திய நிறுவனமான ஓலா, உபெர், பவுன்ஸ், வோகோ உள்ளிட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களை இந்தியாவில் தயாரித்துவருகின்றன. இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 1 சதவீதத்துக்கும் குறைவானதே.

ஸ்மார்ட்போன் மூலம் லாக், அன்லாக்… 90/120 கிமீ ஸ்பீடில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர்! – விலை எவ்வளவு தெரியுமா?

உலகத்திலேயே மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் நிறுவி வருகிறது. தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்புபவர்கள் அதிகம் இருந்தாலும், அதன் விலை தலையைச் சுற்ற வைக்கிறது. அந்த வகையில் அவர்களின் தயக்கத்தை உடைக்க மிகவும் மலிவான விலையில் பல்வேறு அம்சங்கள் கொண்ட ஸ்கூட்டரை ஓலா தயாரித்து வருகிறது. இதன்மூலம் நிச்சயம் இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் புரட்சி ஏற்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்து வந்தது.

ஸ்மார்ட்போன் மூலம் லாக், அன்லாக்… 90/120 கிமீ ஸ்பீடில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர்! – விலை எவ்வளவு தெரியுமா?

அதை உறுதிப்படுத்தும் விதமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்பதிவில் உலக சாதனை புரிந்தது. எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்புபவர்கள் ரூ.499 கொடுத்து முன்பதவி செய்யுமாறு கடந்த ஜூலை 16ஆம் தேதி ஓலா அறிவித்திருந்தது. அறிவித்த 24 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் ஓலா ஸ்கூட்டருக்காக முன்பதிவு செய்து தெறிக்க விட்டர். இந்த முன்பணம் ஸ்கூட்டர் வாங்கும்போது திருப்பியளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளதும், ஏராளமானோர் முன்பதிவு செய்ய காரணம். தற்போது சுதந்திர தினமான இன்று மாடல்களின் விவரங்களையும் அதன் விலையையும் இன்று வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் மூலம் லாக், அன்லாக்… 90/120 கிமீ ஸ்பீடில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர்! – விலை எவ்வளவு தெரியுமா?

சிறப்பம்சங்கள், விலை பின்வருமாறு:

எஸ் 1 ஸ்கூட்டர்:

சார்ஜ் செய்வதற்கு மொத்தம் 6 மணி நேரம் (இரு மாடல்களுக்கும் பொருந்தும்)

மணிக்கு அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் (Top Speed) வேகம் வரை செல்லும் திறன்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 121 கிமீ தூரம் செல்லும்

0-40 கிலோ மீட்டர் வேகத்திற்கு 3.6 விநாடிகளில் எட்டும்

18 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் ஏறும் வசதி (இரு மாடல்களுக்கும் பொருந்தும்)

ஸ்மார்ட்போன் மூலம் லாக் செய்யலாம் (இரு மாடல்களுக்கும் பொருந்தும்)

விலை – ரூ.99 ஆயிரத்து 999

நிறம் – கறுப்பு, சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ஊதா என 10 நிறங்களில் வெளியாகிறது (இரு மாடல்களுக்கும் பொருந்தும்)

ஸ்மார்ட்போன் மூலம் லாக், அன்லாக்… 90/120 கிமீ ஸ்பீடில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர்! – விலை எவ்வளவு தெரியுமா?

எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டர்:

மணிக்கு அதிகபட்சமாக 115 கிலோமீட்டர் வேகத்துடன் செல்லும்

0-40 கிலோமீட்டர் வேகத்தை 3 விநாடிகளில் எட்டும் திறன்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 181 கிமீ தூரம் செல்லும்

விலை – ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 999