சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற வெண்டைக்காய் இட்லி!

 

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற வெண்டைக்காய் இட்லி!

சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக உள்ளது. எதை சாப்பிடுவது, எதைத் தவிர்ப்பது என்ற குழப்பம், எல்லோரும் சாப்பிடுவதை நம்மால் சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். என்னதான் ஏக்கம் இருந்தாலும் உடல் நலனுக்காக சில தியாகம் செய்தாக வேண்டி உள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற வெண்டைக்காய் இட்லி!

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க அதிக நார்ச்சத்து உள்ள உணவை எடுக்க வேண்டும். அவர்களுக்கு வெண்டைக்காய் இட்லி நல்ல தீர்வாக அமையும். ஒரு இட்லியில் இருந்து 120 கலோரி, 17.9 கார்போஹைட்ரேட், 5.63 கிராம் புரதம், 4.39 கிராம் கொழுப்பு, 6.9 கிராம் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும். வழக்கமான இட்லி தோசைக்க மாற்றாக இதை செய்யலாம். வித்தியாசமாக இருக்கும், சர்க்கரை அளவு ரத்தத்தில் கலப்பது குறையும்.

தேவையானவை: இட்லி மாவு 2 கப், வெண்டைக்காய் 150 கிராம், பச்சை மிளகாய் 1, பெருங்காயம் – ஒரு சிட்டிகை, சீரகம் 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

இட்லி தயாரிப்பதற்கு முன்பு இட்லி மாவில் சிறு துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்கு கலக்க வேண்டும். இதில் துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி இட்லி வார்க்க வேண்டும். சுவையான வெண்டைக்காய் இட்லி ரெடி! சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சட்னியைத் தவிர்ப்பது நல்லது. அல்லது குறைவாக எடுத்துக்கொள்ளலாம். சாம்பார், பருப்பு கூட்டு வைத்து தொட்டுக்கொள்ளலாம்.