பெட்ரோல் விலை உயர்வு ஏன்? – ஒருவழியாக உண்மையை ஒத்துக்கொண்ட பெட்ரோலிய அமைச்சர்!

 

பெட்ரோல் விலை உயர்வு ஏன்? – ஒருவழியாக உண்மையை ஒத்துக்கொண்ட பெட்ரோலிய அமைச்சர்!

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் விண்ணை முட்டுகிறது. இதனை எதிர்த்து மக்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதற்கு மத்திய அரசோ கொஞ்சம் கூட செவிசாய்ப்பதில்லை. கொரோனா கால நிதி என்று கூறி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய அரசு இன்னமும் குறைக்கவில்லை.

Image result for dharmendra pradhan

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ அரசு மீது பழிபோட்டால் போட்டுக்கொள்ளுங்கள் என மிகவும் அலட்சியமாகக் கூறுகிறார். பெரும்பான்மையான மத்திய அமைச்சர்களின் மறைமுக பதிலும் இதுவாகத் தான் இருக்கும் என்பதும் புரிகிறது. ஆனால், பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொஞ்சம் டீசன்ஸி தெரிந்தவர். சுற்றி வளைத்து இதே பதிலைத் தான் அவரும் கூறுகிறார். இரு வாரங்களுக்கு முன் எத்தனை நாட்கள் விலை ஏறியிருக்கிறது, குறைந்திருக்கிறது என ஒரு பட்டியல் போட்டு விநோதமான விலை உயர்வுக்கு விளக்கம் கூறியிருந்தார்.

பெட்ரோல் விலை உயர்வு ஏன்? – ஒருவழியாக உண்மையை ஒத்துக்கொண்ட பெட்ரோலிய அமைச்சர்!

தற்போது புதுவிதமான இரு காரணங்களைத் தேடிவந்து ஒப்பித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அதிக காசுக்கு ஆசைப்பட்டு உற்பத்தியைக் குறைத்துவிட்டன. இதனால் அதற்கு அதிக பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்வாகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் அதிகமாகிறது” என்ற முதல் காரணத்தைக் கூறினார். இறுதியாக இருக்கவே இருக்கிறது கொரோனா அது மேல் ஒரு பழியைத் தூக்கிப்போட்டுவிட்டார். ஆனால் ஒரு உண்மையையும் ஒத்துக்கொண்டுவிட்டார்.

பெட்ரோல் விலை உயர்வு ஏன்? – ஒருவழியாக உண்மையை ஒத்துக்கொண்ட பெட்ரோலிய அமைச்சர்!

இதுகுறித்துப் பேசிய அவர், “பெட்ரோல் விலை உயர்வுக்கு கொரோனாவும் ஒரு காரணம். வேலைவாய்ப்புகளுக்காக மத்திய, மாநில அரசுகள் அதிகமான வளர்ச்சித் திட்டப் பணிகளை உருவாக்கவிருக்கின்றன. அதற்கு அதிகப்படியான நிதிகள் தேவைப்படுகின்றன. இதனால் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனைச் சரிக்கட்டவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீது அதிகப்படியான வரிகளை விதிக்கின்றன. அதேசமயம் மக்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவதில்லை என்பதையும் நாம் உறுதிசெய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மத்திய நிதியமைச்சரும் மாநில அரசுகளும் இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள் என நாம் நம்புவோம்” என்றார்.