ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு அதன் வரலாற்றில் இரண்டாவது முறையாக நஷ்டம்

 

ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு அதன் வரலாற்றில் இரண்டாவது முறையாக நஷ்டம்

நம் நாட்டின் இரண்டாவது பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனமான ஆயில் இந்தியா தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் ஆயில் இந்தியா நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது. ஆயில் இந்தியா நிறுவனம் தனது நிறுவன வரலாற்றில் நஷ்டத்தை சந்தித்த இரண்டாவது சம்பவமாகும். இதற்கு முன் 2018-19ம் நிதியாண்டில் முதல் முறையாக ஒரு காலாண்டில் இந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து இருந்தது.

ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு அதன் வரலாற்றில் இரண்டாவது முறையாக நஷ்டம்
ஆயில் இந்தியா

2020 ஜூன் காலாண்டில் ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.248.61 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2019 ஜூன் காலாண்டில் ஆயில் இந்தியா நிறுவனம் ரூ.624.80 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. கடந்த ஜூன் காலாண்டில் ஆயில் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.1,874.48 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் ரூ.3,496.10 கோடியாக இருந்தது.

ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு அதன் வரலாற்றில் இரண்டாவது முறையாக நஷ்டம்
ஆயில் இந்தியா

ஆயில் இந்தியா நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது குறித்து அந்நிறுவனத்தின் நிதி பிரிவு இயக்குனர் ஹரிஷ் மாதவ் கூறுகையில், கடந்த ஜூன் காலாண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 30.43 டாலராக குறைந்தது. அதேசமயம் ஒரே பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதற்கான உற்பத்தி செலவினம் 32 முதல் 33 டாலராக இருந்தது. இதுதான் நிறுவனம் நஷ்டத்தை சந்திக்க முக்கிய காரணம் என தெரிவித்தார்.