வருவாய் அதிகரிப்பு.. ஆயில் இந்தியா லாபம் ரூ.1,215 கோடி

 

வருவாய் அதிகரிப்பு.. ஆயில் இந்தியா லாபம் ரூ.1,215 கோடி

ஆயில் இந்தியா நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,214.65 கோடி ஈட்டியுள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா தனது ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆயில் இந்தியா நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,214.65 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 4 மடங்கை காட்டிலும் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் ஆயில் இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.377.63 கோடி ஈட்டியிருந்தது.

வருவாய் அதிகரிப்பு.. ஆயில் இந்தியா லாபம் ரூ.1,215 கோடி
ஆயில் இந்தியா

2021 ஜூன் காலாண்டில் லாபம் ஆயில் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.6,276.58 கோடியாக உயர்ந்துள்ளது. 2020 ஜூன் காலாண்டில் ஆயில் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.4,334.48 கோடியாக இருந்தது. ஆயில் இந்தியா நிறுவனம் இயற்கை எரிவாயுவை அரசு நிர்ணயம் செய்த விலையில் விற்பனை செய்கிறது. இது உற்பத்தி செலவை காட்டிலும் குறைவாகும். இதனால் ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு இயற்கை எரிவாயு விற்பனை நஷ்டம் ஏற்படுகிறது.

வருவாய் அதிகரிப்பு.. ஆயில் இந்தியா லாபம் ரூ.1,215 கோடி
ஆயில் இந்தியா

2021 ஜூன் காலாண்டில் லாபம் ஆயில் இந்தியா நிறுவனத்துக்கு இயற்கை எரிவாயு விற்பனை வகையில் ரூ.88.58 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ஆயில் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.63 சதவீதம் குறைந்து ரூ.213.60ஆக இருந்தது.