நெல் கொள்முதல் செய்ய தாமதிக்கும் அதிகாரிகள்… வேதனையில் கோபி விவசாயிகள்…

 

நெல் கொள்முதல் செய்ய தாமதிக்கும் அதிகாரிகள்… வேதனையில் கோபி விவசாயிகள்…

ஈரோடு

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல்
செய்யாமல் அதிகாரிகள் தாமதம் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

நெல் கொள்முதல் செய்ய தாமதிக்கும் அதிகாரிகள்… வேதனையில் கோபி விவசாயிகள்…

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில்
சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது
அறுடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆதனால் தமிழக அரசு வாணிபக் கழகத்தின் சார்பில் 22 இடங்களில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வார காலமாக தொடர் மழையினால் அறுவடைப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுசென்ற நெல்லை, அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், நெல் மணிகள் மழையில் நனைந்து சேதமடைந்து உள்ளதாகவும், விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை 15 நாட்களுக்கு மேலாகியும் கொள்முதல் செய்யாமல் அலை கழிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

நெல் கொள்முதல் செய்ய தாமதிக்கும் அதிகாரிகள்… வேதனையில் கோபி விவசாயிகள்…

மேலும், வியாபாரிகள் வெளி மாவட்டங்களிலிருந்து லாரிகள் மூலம் கொண்டுவரும் நெல்லை, டிராக்டருக்கு மாற்றி அதை கோபிசெட்டிபாளையம் பகுதியில் அறுவடை செய்யப்பட்டபோல் போலி சான்றிதழ்கள் பெற்று, போலி விவசாயிகளின் பெயர்களில் அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

எனவே, அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல்களை 5 நாட்களுக்குள் கொள்முதல் செய்யவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்களுக்கு ஒரு வார காலத்திற்குள் வங்கியில் பணம் செலுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.