திருச்சியில் விதிகளை மீறி கட்டிய வணிக வளாகத்திற்கு அதிகாரிகள் சீல்

திருச்சியில் விதிகளை மீறி கட்டிய வணிக வளாகத்திற்கு அதிகாரிகள் சீல்

திருச்சி

திருச்சி நகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். திருச்சி தெப்பக்குளம் நந்திகோவில் தெருவில், பாலக்கரையை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது.

திருச்சியில் விதிகளை மீறி கட்டிய வணிக வளாகத்திற்கு அதிகாரிகள் சீல்

இந்த கட்டிடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி, நகைக்கடை, துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநகராட்சி விதிமுறைகளுக்கு புறம்பாக வணிக வளாகம் கட்டுப்பட்டு உள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திருச்சி அல்லூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

திருச்சியில் விதிகளை மீறி கட்டிய வணிக வளாகத்திற்கு அதிகாரிகள் சீல்

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதிகளை மீறிய அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பத்தனர். அதன்பேரில், இன்று கட்டிடத்தில் இருந்த கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றிய மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கடைகளை பூட்டி சீல்வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.