‘செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் அச்சம் தேவையில்லை’ – அதிகாரிகள் தகவல்!

 

‘செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் அச்சம் தேவையில்லை’ – அதிகாரிகள் தகவல்!

நிவர் புயலால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பியிருக்கும் நிலையில், மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயல் நாளை அதிகாலை அல்லது நள்ளிரவு தான் கரையை கடக்கும் என்பதால், அதுவரை அதீத கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியும் தற்போது நிரம்பியுள்ளதால், இன்று பிற்பகல் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

‘செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் அச்சம் தேவையில்லை’ – அதிகாரிகள் தகவல்!

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் சென்று பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் பேசிய அதிகாரிகள், மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அடையாறு ஆற்றில் 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் திறன் உள்ளது என்றும் தெரிவித்தனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது திடீரென 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் அந்த நிலை ஏற்பட்டதாகவும், முதற்கட்டமாக 1000 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மக்கள் நீர் நிலைகள் மற்றும் ஆற்றங்கரையோரத்தை வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.