• April
    02
    Thursday

Main Area

Main



திமுக போட்டியிடும் தொகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு

முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடப் போகும் தொகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

dmk

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை நிறைவு செய்த திமுக, தாங்கள் போட்டியிடப் போகும் தொகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் திமுக, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, வேலூர், சேலம், அரக்கோணம், கிருஷ்ணகிரி, தர்மரி, திருவண்ணாமலை, கடலூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

dmk1

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, கன்னியாகுமரி, ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, மயிலாடுதுறை, தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, ஆரணி, விருதுநகர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

con

அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய தொகுதிகளிலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய தொகுதிளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மற்றும் தென்காசி ஆகிய தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

alli

 

ali

மதிமுகவுக்கு ஈரோடு, முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு கள்ளக்குறிச்சி என தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.