கூட்டம் இல்லாத நேரத்தில் பொருள் வாங்கினால் சலுகை!

 

கூட்டம் இல்லாத நேரத்தில் பொருள் வாங்கினால் சலுகை!

கடை, சந்தை பகுதிகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

கூட்டம் இல்லாத நேரத்தில் பொருள் வாங்கினால் சலுகை!

உலக நாடுகளில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 94 லட்சத்து 31 ஆயிரத்து 692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 38 ஆயிரத்து 722 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 443 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளன. ர் இதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 539 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் மக்கள் கூடுதல் விழுப்புடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.

கூட்டம் இல்லாத நேரத்தில் பொருள் வாங்கினால் சலுகை!

இந்நிலையில் கடை, சந்தை பகுதிகளுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் சந்தையில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொருட்கள் வாங்கினால் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கலாம் என்றும் சந்தை, கடைகள் உள்ளிட்ட இடங்களில் நுழைவதற்கும் வெளியே செல்வதற்கும் தனித்தனி வழிகளை பின்பற்றலாம் என்றும் அறிவித்துள்ளது.