ஒடிசா மாநிலத்தில் 11 மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் பொதுமுடக்கம்

 

ஒடிசா மாநிலத்தில் 11 மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் பொதுமுடக்கம்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் 11 மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்திற்கு திரும்பி வந்ததால் அம்மாநிலத்தில் கொரோனா பரவல் சவாலை சமாளிக்க முடியாமல் ஒடிசா அரசாங்கம் திணறி வருகிறது. அதனால் அம்மாநில அரசு பல கடுமையான நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் 11 மாவட்டங்களில் ஜூன் மாதம் முழுவதும் வார இறுதி நாட்களில் பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் 11 மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் பொதுமுடக்கம்

கஞ்சம், பூரி, நாயகர், கோர்தா, கட்டாக், ஜகத்சிங்க்பூர், கேந்திரபாரா, ஜஜ்பூர், பத்ராக், பாலசூர் மற்றும் போலங்கீர் ஆகிய இடங்களில் ஜூன் 30 வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில தலைமைச் செயலாளர் அசித் குமார் திரிபாதி தெரிவித்துள்ளார். இந்த 11 மாவட்டங்களில் சுமார் 80 சதவீதம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.