யானை கூட்டத்தால் சேதம் அடைந்த பகுதிகளை 7 கி.மீட்டர் நடந்தே சென்று பார்வையிட்ட ஒடிசா பெண் எம்.எல்.ஏ….

 

யானை கூட்டத்தால் சேதம் அடைந்த பகுதிகளை 7 கி.மீட்டர் நடந்தே சென்று பார்வையிட்ட ஒடிசா பெண் எம்.எல்.ஏ….

ஒடிசாவில் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் யானை கூட்டம் ஏற்படுத்திய சேதங்களை, பெண் எம்.எல்.ஏ. ஒருவர் 7 கி.மீட்டர் தூரம் நடந்தே சென்று பார்வையிட்டது பலரையும் வியப்பில் ஆற்றியுள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் வனஎல்லைக்கு பகுதிகளில் கிராமங்களில் வசிக்கும் மக்கள் யானை கூட்டத்தால் மிகவும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர். ஜார்க்கண்டிலிருந்து வரும் யானை கூட்டம் நெல் வயல்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி சென்று விடுகின்றன. இது தொடர்பாக அந்த பகுதி வனத்துறையினரிடம் அந்த கிராமத்தினர் புகார் கொடுத்தனர். ஆனால் அதனால் இந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்த கரஞ்சியா சட்டப்பேரவை தொகுதி பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. பசாந்தி ஹெம்ப்ராம். கடந்த வெள்ளிக்கிழமையன்று மாவட்ட தலைநகரமான பாரிபாடவுக்கு சென்று கொண்டு இருந்தார்.

யானை கூட்டத்தால் சேதம் அடைந்த பகுதிகளை 7 கி.மீட்டர் நடந்தே சென்று பார்வையிட்ட ஒடிசா பெண் எம்.எல்.ஏ….
யானை கூட்டம் (கோப்புப்படம்)

இதனை பார்த்த பியுன்ரியா, நகுட்மாதா, குஞ்சியா மற்றும் டாடோ உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் அவரது வாகனத்தை மறித்தனர். யானை கூட்டத்தால் நெல் வயல்கள் மற்றும் வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ. பசாந்தி ஹெம்பராமிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், யானைகள் ஏற்படுத்திய சேதத்தை பார்வையிடுமாறு கோரினர். இதனையடுத்து பசாந்த ஹெம்ப்ராம் உடனடியாக எந்தவித பந்தாவும் இல்லாமல் அவர்களுடன் சுமார் 7 கி.மீட்டர் நடந்தே சென்று அவர்களின் கிராமங்களுக்கு சென்று சேதங்களை பார்வையிட்டார். மேலும், யானைகளை விரட்டுவது தொடர்பாக உள்ளூர் வன அதிகாரிகளுடன் அவர் விவாதித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவது தொடர்பான விஷயத்தையும் கவனிக்கும்படி அவர்களிடம் பசாந்தி ஹெம்ப்ராம் வலியுறுத்தினார்.

யானை கூட்டத்தால் சேதம் அடைந்த பகுதிகளை 7 கி.மீட்டர் நடந்தே சென்று பார்வையிட்ட ஒடிசா பெண் எம்.எல்.ஏ….
பசாந்தி ஹெம்பராம்

இது தொடர்பாக பசாந்தி ஹெம்பராம் கூறுகையில், யாரும் என்னை கிராமத்துக்கு நடந்து வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட கிராமவாசிகளை பார்த்ததும் அவர்களின் குறைகளை கேட்க என் வாகனத்திலிருந்து கீழே இறங்கினேன். அவர்களின் குறைகள் உண்மையானவை. வனத்துறை அதிகாரிகள் அவர்களின் கோரிக்கைகளுக்கு இன்னும் கொஞ்சம் பதிலளித்திருக்க வேண்டும் என தெரிவித்தார். எம்.எல்.ஏ. பசாந்தி ஹெம்பராம் 7 கி.மீட்டர் நடந்தே சென்று சேதங்களை பார்வையிட்டது அந்த பகுதியினருக்கு சந்தோஷத்தையும், தங்களுக்கு கஷ்டத்துக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கொடுத்துள்ளது. மேலும் பசாந்தி ஹெம்ராமை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.