ஒடிசாவில் ஜூன் 1ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு.. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்

ஒடிசாவில் ஜூன் 1ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு.. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்

ஒடிசாவில் வரும் ஜூன் 1ம் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுனை (ஊரடங்கு) அம்மாநில அரசு நீட்டித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒடிசாவில் முதல்வர் நவீன்பட்நாயக் தலைமையிலான அரசு கடந்த 5ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் அறிவித்தது. இந்நிலையில் கொரோனா நிலவரம் சுகாதார நிபுணர்களுடன் அம்மாநில அரசு ஆலோசனை நடத்தியது.

ஒடிசாவில் ஜூன் 1ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு.. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்
நவீன் பட்நாயக்

அதன் பிறகு மாநிலத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்தது. இதனையடுத்து ஒடிசா அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், மே 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி காலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும். வார இறுதி நாட்களில் முழுமையான ஊரடங்கு இருக்கும். வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

ஒடிசாவில் ஜூன் 1ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு.. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்
கொரோனா வைரஸ்

ஊரடங்கின்போது சுகாதாரம் சார்ந்த அனைத்து சேவைகளும் செயல்படும். அம்மாநில அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் தெரு, சாலையோர மற்றும் தனி கடைகள் வார நாட்களில் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை மட்டும் திறக்க அனுமதி. ஒவ்வொரு கடைக்கும் இடையே 30 அடி இடைவெளிகடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.