ஒடிசா என்ஜினீயரின் வேலையை பறித்த கொரோனா.. வளமான வாழ்க்கையை கொடுத்த தோட்டக்கலை…

 

ஒடிசா என்ஜினீயரின் வேலையை பறித்த கொரோனா.. வளமான வாழ்க்கையை கொடுத்த தோட்டக்கலை…

ஒடிசாவில் கொரோனா வைரஸால் வேலையை இழந்த என்ஜினீயர் மரக்கன்று உற்பத்தி மையத்தை தொடங்கி கடந்த 9 மாதங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை விற்பனை செய்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி ஸ்வருப் மிஸ்ரா. இவர் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். ஒட்டு மொத்த உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் இவரையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காலத்தில் சாந்தி ஸ்வரூப் மிஸ்ராவின் வேலை பறிபோனது. கொரோனா மிஸ்ராவின் நிகழ்காலத்தை பறித்து விட்டாலும், ஒரு வளமான எதிர்காலத்துக்கு உந்துதலை கொடுத்து விட்டு சென்றது.

ஒடிசா என்ஜினீயரின் வேலையை பறித்த கொரோனா.. வளமான வாழ்க்கையை கொடுத்த தோட்டக்கலை…
சாந்தி ஸ்வரூப் மிஸ்ராவின் நர்சரி

தொற்றுநோய் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் புதிய வேலையும் தேட முடியாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடந்த சாந்தி ஸ்வரூப் மிஸ்ராவுக்கு மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாமே என்ற யோசனை உதித்தது. உடனே யோசனை செயல்படுத்தவும் தொடங்கினார். தற்போது மிஸ்ரா தனது சொந்த கிராமத்தில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் மையத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இது தொடர்பாக சாந்தி ஸ்வரூப் மிஸ்ரா கூறியதாவது:

ஒடிசா என்ஜினீயரின் வேலையை பறித்த கொரோனா.. வளமான வாழ்க்கையை கொடுத்த தோட்டக்கலை…
சாந்தி ஸ்வரூப் மிஸ்ரா

லாக்டவுன் காலத்தில் நான் எனது வேலையை இழந்தேன். எனது வேலை பறிபோனதுக்கு அரசை குற்றச்சாட்டினாலும் எனது கிராமத்தில் மரக்கன்று உற்பத்தி மையம் தொடங்க முடிவு செய்தேன். பல்வேறு சமூக அமைப்புகளுடன் உதவியுடன் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு என்னால் இயற்கை பாதுகாக்க முடிகிறது. இப்போது வரை 2 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை விற்பனை செய்துள்ளேன். மேலும் கையிருப்பாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் மிஸ்ரா 9 மாதங்களில் 2.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உள்ளார். அவரது நர்சரி (மரப்பண்ணை) பெயர் ஸ்வரூப் நர்சரி.