அனைத்து குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்போன்கள் இலவசம்…. ஒடிசா முதல்வர் அறிவிப்பு

 

அனைத்து குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்போன்கள் இலவசம்…. ஒடிசா முதல்வர் அறிவிப்பு

ஒடிசாவில் ஸ்வாபிமான் அஞ்சல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள ஸ்வாபிமான் அஞ்சல் பிராந்தியம் நக்சல் பாதிப்பு உள்ள பகுதி. முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஸ்வாபிமான் அஞ்சல் பிராந்திய மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் மக்களிடம் கூறியதாவது:

அனைத்து குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்போன்கள் இலவசம்…. ஒடிசா முதல்வர் அறிவிப்பு
ஸ்மார்ட்போன்கள்

ஸ்வாபிமான் அஞ்சல் பிராந்தியம் எப்போதும் எனது இதயத்துக்கு நெருக்கமானது. மாநிலத்தில் முன்னணி பிராந்தியமாக உருவாக்க நான் மேற்கொள்ளும் முயற்சிகளை தொடருவேன். இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக செல்போன்களை மாநில அரசு வழங்கும். நாட்டின் இதர பகுதிகளில் உள்ள மக்களை தொடர்பு கொள்ளவும், குழந்தைகள் ஆன்லைனில் கற்றுக்கொள்ளவும் ஸ்மார்ட்போன்கள் உதவும்.

அனைத்து குடும்பங்களுக்கும் ஸ்மார்ட்போன்கள் இலவசம்…. ஒடிசா முதல்வர் அறிவிப்பு
ஸ்வாபிமான் அஞ்சல்

ஸ்வாபிமான் அஞ்சல் பகுதியில் 4 மொபைல் டவர்கள் உள்ளன. மேலும் 3 டவர்கள் 4ஜி வசதியுடன் விரைவில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 2018ம் ஆண்டில் ஸ்வாபிமான் அஞ்சல் பகுதிக்கு சென்று இருந்த முதல்வர் நவீன் பட்நாயக் ரூ.100 கோடி சிறப்பு தொகுப்பை அறிவித்து இருந்தார். பின் அதனை ரூ.215 கோடியாக உயர்த்தினார். கல்வி, வங்கி, வாழ்வதார சுகாதாரம், தகவல்தொடர்பு, குடிநீர் மற்றும் பாசனம் உள்பட பல்வேறு விஷயங்களை கவனம் கொண்டு நிதி உயர்த்தப்பட்டது.