அக். 31 ஆம் தேதி வரை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அனுமதி கிடையாது!

 

அக். 31 ஆம் தேதி வரை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அனுமதி கிடையாது!

அக்.31ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொதுமுடக்கம் அக். 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

அக். 31 ஆம் தேதி வரை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அனுமதி கிடையாது!

மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மெரினாவில் பொதுமக்களை இன்னும் அனுமதிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். அத்துடன் மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் நடைமுறை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

அக். 31 ஆம் தேதி வரை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அனுமதி கிடையாது!

இந்நிலையில் சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அக்டோபர் 31 வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை மாநகராட்சி உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. மெரினா தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் நவம்பர் 9ஆம் தேதி திறக்கப்படுகிறது என்றும் டெண்டர் திறப்பு குறித்து நவம்பர் 11ல் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதிப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.