”அக். 1 முதல் ஒபன் செல் இறக்குமதிக்கு மீண்டும் 5 % வரி”டிவி விலை உயரும் அபாயம்!

 

”அக். 1 முதல் ஒபன் செல் இறக்குமதிக்கு மீண்டும் 5 % வரி”டிவி விலை உயரும் அபாயம்!

டிவி பேனல் தயாரிப்பிற்கு பயன்படும் ஒபன் செல் என்ற முக்கிய உதிரிபாகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வரிவிலக்கு வரும் செப்டம்பருடன் முடிவடைவதால், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அவற்றிற்கு வரி விதிக்கப்பட்டு டிவி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

டிவி பேனல் உற்பத்தியில் ஒபன் செல் என்ற உதிரிபாகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த உபகரணமானது, வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு 7,500 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் இறக்குமதியை குறைக்கவும், அவற்றை, இந்தியாவிலேயே தயாரிக்க ஊக்கப்படுத்தவும், ஒரு ஆண்டு கால அவகாசத்துடன், அவற்றின் மீதான சுங்க வரியில் 5 சதவீத வரிவிலக்கு சலுகை வழங்கி இருந்தது.

இந்நிலையில் இந்த வரிவிலக்கு அவகாசம் செப்டம்பருடன் முடிவுக்கு வருவதால் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், 5 சதவீத சுங்க வரி செலுத்தி தான் ஒன் ஒபன் செல் எனும் உதிரிபாகங்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியும். இந்நிலையில், இந்த வரிவிலக்கு முடிவுக்கு வருவதால், டிவி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

”அக். 1 முதல் ஒபன் செல் இறக்குமதிக்கு மீண்டும் 5 % வரி”டிவி விலை உயரும் அபாயம்!

உள்நாட்டில் போதுமான அளவிற்கு ஒபன் செல் உற்பத்தி ஏற்படாத காரணத்தால், வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் டிவி உற்பத்தி துறை உள்ளது என்றும் இதனால் 5 சதவீத சுங்க வரி காரணமாக டிவி விலை உயர்வதை தவிர்க்க முடியாது என்றும் டிவி உற்பத்தி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Buy TCL 81.28 cm (32 inch) HD LED TV, 32R300 at Reliance Digital

இது ஒருபுறமிருக்க, விரிவிதிப்பை காரணம் காட்டி, டிவி விலையை உயர்த்துவதற்கு சில நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வரிவிதிப்பால் டிவி விலை 600 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை உயரும் அபாயம் உள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-எஸ்,முத்துக்குமார்