#BREAKING: காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.4ம் தேதி தேர்தல்!

 

#BREAKING: காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.4ம் தேதி தேர்தல்!

தமிழகத்தில் காலியாக 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.4ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாக இருந்தது. அதிமுக எம்.பி முகமது ஜான் மறைந்தாலும் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வைத்திலிங்கம் மற்றும் கே.பி முனுசாமி தங்களது பதவியை ராஜினாமா செய்ததாலும் மாநிலங்களவையில் 3 இடங்கள் காலியாகின். அந்த இடங்களுக்கு தனித் தனியாக தேர்தல் நடத்துமாறு திமுக கோரிக்கை விடுத்தது. அதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், ஒரு இடத்திற்கான தேர்தல் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது.

#BREAKING: காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.4ம் தேதி தேர்தல்!

அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் நடைபெற்றது. திமுகவைச் சேர்ந்த எம்.எம் அப்துல்லா மற்றும் 3 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு எம்.எம் அப்துல்லாவின் மனு மட்டும் ஏற்கப்பட்டது. எனவே, அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றிச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மாநிலங்களவையில் காலியாக உள்ள மற்ற இரண்டு இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 15ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என்றும் 4ம் தேதி காலை 9 மணியில் இருந்து 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.